Enable Javscript for better performance
ஆறுமுகனேரி அருகே 3 விபத்துகள்: இருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற வெவ்வேறு 3 சாலை விபத்துகளில் இருவர் இறந்தனர்.

    தூத்துக்குடி லயன் டவுன் கிளாரன்ஸ் (75), இவரது மகன் பிரைட்டன் (36),பிரைட்டன மனைவி பிஸ்மி (29), பிஸ்மியின் தம்பி பிரசாத் (28) ஆகியோர் ஒரு காரில் மணப்பாடு தேவாலயத்துக்கு சென்று விட்டு தூத்துக்குடிக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.

    ஆறுமுகனேரி காமராஜ்புரம் அருகில் வந்தபோது திருச்செந்தூர் நோக்கி சென்ற மணல் லாரியும், காரும் மோதி கொண்டன. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த கிளாரன்ஸ் உள்ளிட்ட நால்வரும் பலத்த காயமடைந்தனர்.

     இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கட்டடத் தொழிலாளி பலி:

    ஆறுமுகனேரி காமராஜ்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சந்தனகுமார் மகன் ராஜசேகர் (22). கட்டடத் தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பரானமுருகேசனும் மோட்டார் சைக்கிளில் முள்ளக்காட்டில் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளனர்.

       தண்ணீர் பந்தல் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வைக்கோல் பாரம் ஏற்றிய மினி லாரி திடீரென வேகத்தை குறைத்ததால், லாரிக்கு பின்னால் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ராஜசேகர் நெஞ்சில்  லாரியில் இருந்த கம்பி குத்தியதாம். இதில் முருகேசன் காயமடைந்தார். ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜசேகர் இறந்தார். முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து குரும்பூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

    பொறியாளர் சாவு:   ஆறுமுகனேரி மடத்துவிளையைச் சேர்ந்த தனீஸ்லாஸ் மகன் நிக்ஸன் (44), அவரது நன்பர்கள் சாகுபுரம் டிசிடபிள்யூ அலுவலர்கள் குடியிருப்பைச் சேர்ந்த விக்டர் ஜோயல் (45), ஆறுமுகனேரி மேட்டுவிளை கனகராஜ் மகன் பிரின்ஸ் (53), குரூஸ் நகர் சுப்பையா மகன் முத்துக்குமராசாமி (45) மற்றும் கார் டிரைவர் ஆறுமுகனேரி கணேசபுரம் பெரியசாமி மகன் ஆறுமுகம் ஆகியோர் சனிக்கிழமை குற்றாலம் சென்று விட்டு, திரும்பி வந்தபோது குரும்பூர் அருகே சாலையோரம் அமைந்திருந்த சாலைவிதி வலியுறுத்தும் அறிவிப்பு பலகையில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நிக்ஸன் இறந்து விட்டார். நிக்ஸன் டிசிடபிள்யூ நிறுவனத்தில் பொறியாளராக உள்ளார்.

    இதுகுறித்து குரும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai