Enable Javscript for better performance
ஆழ்வார்தோப்பில் விவசாயி வெட்டிக்கொலை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள  ஆழ்வார்தோப்பில் புதன்கிழமை இரவு விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    மேலஆழ்வார்தோப்பைச் சேர்ந்த ராமசாமி மகன் ஜெயசேகரன் (55). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ராஜகோபால் மகன் வாசனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.

    இந்நிலையில் தனது சைக்கிளில் ஆழ்வார்தோப்பு தாமிரவருணி ஆற்றுப்பாலம் அருகே ஜெயசேகரன் வந்து கொண்டிருந்தாராம். அப்போது வாசன், அதே ஊரைச் சேர்ந்த  சிவந்திநாதன் (27), மதன் ஆகியோர் ஜெயசேகரனை வழிமறித்து அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜகோபால், காவல் ஆய்வாளர்கள் தில்லைநாகராஜன்(ஸ்ரீவைகுண்டம்), ராஜ் (ஆழ்வார்திருநகரி), உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், அருணாசலம் உள்ளிட்ட போலீஸார் விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக வாசன் உள்ளிட்ட மூன்று பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai