Enable Javscript for better performance
\\\"உடன்குடியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதைத் தடுக்க நடவடிக்கை\\\'- Dinamani

சுடச்சுட

    

    "உடன்குடியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதைத் தடுக்க நடவடிக்கை'

    By dn  |   Published on : 08th August 2013 12:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உடன்குடி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார்.

    உடன்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலத்தடி நீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் மேலும் பேசியதாவது:

    உடன்குடியில் நிலத்தடி நீர் மிகவும் குறைவாக உள்ளது. இப் பகுதியில் சொந்த தேவைகள், குடிநீர் விநியோகம், தொழில் சம்பந்தமாக நிலத்தடி நீரை இனி எடுப்பதற்கு உரிய அனுமதி பெற வேண்டும். மழை நீரை பல்வேறு வகைகளிலும் சேமிப்பதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.

    இக் கூட்டத்தில் உடன்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவி மல்லிகா, துணைத் தலைவர் ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் சு.சண்முகவல்லி வரவேற்றார். மத்திய நிலத்தடி நீர் வாரிய விஞ்ஞானி சுப்பாராஜ், மாசுக்கட்டுப்பாட்டு உதவிப் பொறியாளர் பாரதி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இ.தமிழ்செல்வி, சொ.உலகநாதன், வருவாய் ஆய்வாளர் இசக்கிதுரை, உடன்குடி பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாள், தூத்துக்குடி மாவட்ட பம்புசெட் விவசாய சங்கத் தலைவர் பொன்ராமநாத ஆதித்தன், செயலர் ஆறுமுகப்பாண்டியன், விவசாயிகள்- பொதுமக்கள் நலச் சங்கத் தலைவர் சந்திரசேகர் உள்பட பலர்  கலந்துகொண்டனர். உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பா.முனியாண்டி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai