Enable Javscript for better performance
எட்டயபுரம் அருகே கோவிலில் திருட்டு - Dinamani

சுடச்சுட

    

    எட்டயபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    எட்டயபுரத்தையடுத்த மேலநம்பிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் பூசாரி  சி.வெள்ளைச்சாமி (70) வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு கோவிலை பூட்டிவிட்டுச் சென்றாராம். ஞாயிற்றுக்கிழமை காலை கோவிலுக்கு வந்தபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மனிடமிருந்து 2 கிராம் தங்கத் தாலி பொட்டு மற்றும் 2 கிராம் வெள்ளி தாலி பொட்டு மற்றும் உண்டியல் பணமும் திருடு போயிருந்தது.

    இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், எட்டயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai