Enable Javscript for better performance
ஏரல் அருகே குடிநீர் கிணற்றில் மதுபாட்டில் வீச்சு: 20 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    ஏரல் அருகே குடிநீர் கிணற்றில் மதுபாட்டில் வீச்சு: 20 பேர் மீது வழக்கு

    By dn  |   Published on : 08th August 2013 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏரல் அருகே உள்ள சிவகளையில் குடிநீர் கிணற்றில் மதுபாட்டில் வீசியது தொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகளையில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்துவதற்காக தனித்தனியே இரண்டு குடிநீர் கிணறுகள் உள்ளன. இதில் ஒரு சமூக மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் கிணற்றில் ஜூலை 2-ம் தேதி மதுபாட்டில்கள், முள் செடிகளும் கிடந்ததாம்.  இந்நிலையில் ஜூலை 4-ம் தேதி மற்றொரு பிரிவினர் பயன்படுத்தும் கிணற்றிலும் மதுபாட்டில்கள், முள் செடிகளும் கிடந்ததாம்.  குடிநீர் இறைக்கப் பயன்படும் வாளியும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததாம். இதனால் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    இதை தொடர்ந்து ஏரல் காவல் ஆய்வாளர் ராமராஜன் ஒரு தரப்பைச் சேர்ந்த சிவகளை ஊராட்சித் தலைவர் கணபதி ராஜா (44), அந்தோனி (61), சுப்பையா (62), சின்ன மொம்மு (42), வீரபாண்டி (37), முத்துவிநாயகம் (25), ராமசாமி (48), அழகர் (68), முத்துபடையாச்சி (65), முருகன் (46) மற்றும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த முருகன் (50), மாணிக்கவாசகம் (55), சந்திரசேகர் (37), சுடலைமுத்து (49), இளையராஜா (38), சுடலைமுத்து (45), சீதாராமசாமி (23), காளியப்பன் (39), சுந்தர் (37) ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai