சுடச்சுட

    

    காயல்பட்டினம் ஹிஜ்ரா கமிட்டி சார்பில், ரமலான் நோன்புப் பெருநாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

    கடந்த ஜூலை 9-ம் தேதி தொடங்கிய ரமலான் மாதம் 29 நாள்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதியுடன் முடிவடைவதால், ஆகஸ்ட் 7 ஆம் தேதி புதன்கிழமை பெருநாள் என்றும், அன்று காலை  காயல்பட்டினம் கடற்கரை திடலில் பெருநாள் தொழுகை நடைபெறுமென்றும் காயல்பட்டினம் நகர ஹிஜ்ரா கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதன்கிழமை காலையில் காயல்பட்டினம் கடற்கரையில் நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. கே.எஸ்.முஃபீஸýர் ரஹ்மான் தொழுகையை வழிநடத்தினார். ஏர்வாடியைச் சேர்ந்த அப்துர்ரஷீத் குத்பா பேருரையாற்றினார். குத்பா பேருரை நிறைவுற்றதையடுத்து, அதில் பங்கேற்றவர்கள் கட்டித்தழுவி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். ஏற்பாடுகளை, ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai