Enable Javscript for better performance
கார் மோதி முதியவர் பலி- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரியில் புதன்கிழமை கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

    ஆறுமுகனேரி கமலா நேரு காலனியைச் சேர்ந்தவர் ஆண்டிநாடார் (70). இவருக்குச் சொந்தமான உப்பளம் ஆறுமுகனேரி வடபுறமுள்ள கொட்டைமடைக்காடு பகுதியில் உள்ளது. உப்பளத்திலிருந்து புதன்கிழமை மாலையில் ஆண்டிநாடார் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது, காயல்பட்டினத்தில் இருந்து வந்த கார் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், சம்பவஇடத்திலேயே அவர் இறந்தார். காரின் ஓட்டுநரான ஆத்தூரைச் சேர்ந்த அலாவுதீனும் (46) காயமடைந்தார். அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai