Enable Javscript for better performance
காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: ஊராட்சி துணைத் தலைவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: ஊராட்சி துணைத் தலைவர் கைது

    By dn  |   Published on : 08th August 2013 12:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி துணைத் தலைவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவர் பேச்சிமுத்து. இவர், மோட்டார் சைக்கிளில் கடலையூர் சாலையில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டாராம். அப்போது, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னஓடைப்பட்டி ஊராட்சி துணைத் தலைவரான கருத்தப்பாண்டியன் (39) மோட்டார் சைக்கிளை வழிமறித்து பேச்சிமுத்துவுக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து, கருத்தப்பாண்டியனை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai