Enable Javscript for better performance
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    தட்டார்மடம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் புதன்கிழமை மீட்டனர்.

     தட்டார்மடம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பு சின்னராணிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி மனைவி பிலோமி ( 65). இவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனராம். இவரது கணவர் இறந்ததும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாராம். அவரது மகன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை அங்குள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றில் பிலோமி விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சாத்தான்குளம்   தீயணைப்பு நிலைய வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai