Enable Javscript for better performance
கோவில்பட்டியில் இன்று மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெறுகிறது.

    கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வட்டார வள மைய அலுவலகத்தில் நடைபெறும் இம் முகாமிற்கு கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ராஜமாணிக்கம் தலைமை வகிக்கிறார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கணேசன், செண்பகக்கனி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சரோஜா முகாமை தொடங்கி வைக்கிறார். எலும்பு முறிவு, கண், காது, மூக்கு, தொண்டை, பொது உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இம் முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai