Enable Javscript for better performance
சாத்தான்குளம் அருகே கரும்பு தோட்டத்தில் தீ- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்புகள் சேதமடைந்தன.

    சாத்தான்குளம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ச. கண்ணன் (40). இவருக்குச் சொந்தமான தோட்டம் வேலன்புதுக்குளத்தில் உள்ளது. இதில் ஆறரை ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், நாலரை ஏக்கரில் விளைந்திருந்த கரும்புகள் சேதமாகின. இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai