Enable Javscript for better performance
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் உரிமையியல் நீதிமன்றத்தில் மாவட்ட அமர்வு நீதிபதி பிரபுதாஸ் சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.

     சாத்தான்குளம் வந்த மாவட்ட அமர்வு நீதிபதி பிரபுதாஸýக்கு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.ஆர்.பி.டி. கல்யாண்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமர்வு நீதிபதி , உரிமையியல் நீதிமன்ற கோப்புகளை பார்வையிட்டு ஆண்டு தணிக்கை செய்தார்.

     பின்னர் வழக்குரைஞர்களை சந்தித்து நீதிமன்ற வளர்ச்சி மற்றும் வழக்குகள் குறித்து கலந்துரையாடினார். இதில் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.ஆர்.பி.டி . கல்யாண்குமார், செயலர் சுசீல்குமார், பொருளாளர் ஏ.பி. சுரேஷ் உள்பட அனைத்து வழக்குரைஞர்களும் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai