Enable Javscript for better performance
தமிழக ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக ஆசிரியர் கூட்டணியின் கோவில்பட்டி வட்டார கிளை சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய விகிதத்தை தமிழகத்தின் இடைநிலை ஆசிரியர்களுக்கும்  வழங்க வேண்டும். பள்ளி அலுவலகங்களில் உள்ள ஆசிரியர், பணியாளர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    ஆசிரியர் பணியிடங்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை கடைப்பிடிக்க வேண்டும். 7-வது ஊதியக் குழுவினை உடனடியாக அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    வட்டாரத் தலைவர் துரைராஜ் மோகனதாஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராமமூர்த்தி பேசினார். வட்டார துணைச் செயலர் முருகேஸ்வரி, துணைத் தலைவர் சு.மாரியம்மாள், வட்டார செயற்குழு உறுப்பினர் மா.மாரியம்மாள், வட்டாரச் செயலர் குமாரசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    உடன்குடி:  உடன்குடி தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் கூட்டணி வட்டார துணைத் தலைவர் தங்கஇசக்கி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார், வட்டாரச் செயலர் பெருமாள், வட்டாரப் பொருளாளர் பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராஜசிங் பாஸ்கர், வட்டார துணைச் செயலர் ரத்தினராஜ், மாவட்ட இணைச் செயலர் ஜோயல் லாரன்ஸ், மாவட்ட துணைத் தலைவர் மகாலிங்கம், செயற்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ், மரியநாயகம், வட்டார இணைச் செயலர் ஜவாஹர், மாவட்ட மகளிரணிச் செயலர் பவுலாராதிகா, வட்டார மகளிரணிச் செயலர் தீபாராணி, வட்டார துணைத் தலைவர் ஜான்சிராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai