தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டம்
By dn | Published on : 08th August 2013 12:18 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி சிதம்பர நாடார்-காமாட்சியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு விருதுநகர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் நவநீதன், நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கோவில்பட்டி கிளைத் தலைவர் பரமசிவம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் (கோவில்பட்டி), ராஜேஷ் (சாத்தூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். லிபர்டி குரூப்ஸ் அதிபர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
தீர்மானங்கள்: வடமாநிலங்களில் மழை காரணமாகவும், அதிக உற்பத்தி காரணமாகவும் உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும்.
விபத்து ஏற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலையின் உரிமையாளர், மேலாளர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை கைது செய்வதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் உதவியுடன் மாநில அரசை அனுகுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தொழிலதிபர்கள் ராஜு, ராஜவேல், சோலையப்பன், ஜெகதீசன், ஜெயப்பிரகாஷ், தேவதாஸ், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கப் பொருளாளர் செல்வமோகன், நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கப் பொருளாளர் தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலர் சேதுரத்தினம் வரவேற்றார். தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கோவில்பட்டி கிளைச் செயலர் கதிரவன் நன்றி கூறினார்.