தூத்துக்குடியில் இன்று ஆர்ப்பாட்டம்
By dn | Published on : 08th August 2013 12:18 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தூத்துக்குடியில் டெசோ அமைப்பு சார்பில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென மாவட்ட திமுக செயலர் என். பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
டெசோ அமைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி வி.வி.டி.மெயின்ரோடு அண்ணாநகர் 7-வது தெரு அருகே காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். முன்னாள் அமைச்சர் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இரா.கனகராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் சொ.சு.தமிழினியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
எனவே, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.