Enable Javscript for better performance
தூத்துக்குடி: அடகுக் கடையில் 137 பவுன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் நகை அடகுக் கடையில் 137 பவுன் நகைகளை செவ்வாய்க்கிழமை இரவு திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

    தூத்துக்குடி பால்பாண்டிநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் திருமணி. இவர், தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் நகை அடகுக் கடை, இருசக்கர வாகனங்களுக்கு கடனுதவி வழங்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல கடையைப் பூட்டிச் சென்ற அவர், புதன்கிழமை காலை வந்து பார்த்தபோது, முன்பக்கக் கதவு திறந்திருந்ததாம். கடையின் உள்ளே பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த 137 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம்.

    இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் திருமணி புகார் செய்தார். மாநகர காவல் துணைக் கண்காணிப்பாளர் பெஸ்கி தலைமையிலான போலீஸார் சென்று விசாரித்தனர். தடயவியல் நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ. 30 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

    திருமணி கடையின் அருகேயுள்ள ராயன் என்பவரது வீட்டிலும், தூத்துக்குடி டூவிபுரம் 10-வது தெருவில் ஒரு வீட்டிலும் மர்ம நபர்கள் கதவை உடைத்து திருட முயன்றனராம். அங்கு நகைகள் இல்லாததால் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai