Enable Javscript for better performance
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்

    By dn  |   Published on : 08th August 2013 10:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென்கொரிய நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான மதுபானங்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, இருவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்களில் வெளிநாட்டு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறை உதவி ஆணையர் ரஞ்சித் குமார் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் ரகசியமாக சோதனையிட்டனர்.

    அப்போது, கடந்த 25-ம் தேதி தென்கொரியாவிலிருந்து வந்த கன்டெய்னரில் சந்தேகத்துக்கிடமான வகையில் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைச் சோதனையிட்டபோது, அதில் 360 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 32 ஆயிரம் உயர் ரக மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ. 1 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தென்கொரியாவிலிருந்து மிளகு கலந்த உணவுப் பொருள் இறக்குமதி செய்யப்படுவதாக துறைமுகப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்குப் பதில் உயர் ரக மதுபாட்டில்கள் கடத்திவரப்பட்டுள்ளன.

    இதுகுறித்து உதவி ஆணையர் ரஞ்சித்குமார் கூறியது: எங்களுக்கு கிடைத்த தகவலின்படி சோதனை மேற்கொண்டோம். இந்த ரக மதுபானங்களை தமிழகத்தில் யாரும் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. எனவே, யார் மூலம் எங்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது எனவிசாரித்து வருகிறோம்.

    இது தொடர்பாக இருவரிடம் ரகசியமாக விசாரித்து வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai