பரலோக அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்
By dn | Published on : 08th August 2013 12:15 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நடைபெற்ற திருப்பலியில் சிங்கம்பாறை பங்குத்தந்தை ஜெயபாலன், பங்குத்தந்தை அந்தோனி டக்லஸ், அருள்சகாயம், சவரிமுத்து, கிராசியுஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். திருவிழாக் காலங்களில் தினமும் காலை திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெறுகின்றன. 9 ஆம் திருநாலான இம் மாதம் 14-ம் தேதி மாலை 7 மணிக்கு மாலை ஆராதனை குறுக்குச்சாலை முதன்மைக்குரு ஜெரால்டுகுரூஸ் தலைமையில் நடைபெறுகிறது. லூசியா இயக்குநர் கிளாரன்ஸ் மறையுரையாற்றுகிறார். அதன்பின்பு தேர் பவனி நடைபெறுகிறது.
அதிகாலை 4 மணிக்கு தேரடித் திருப்பலி மண்ணின் மைந்தர் மார்ட்டின் மனுவேல் தலைமையில் நடைபெறுகிறது. 10 ஆம் திருநாளான இம் மாதம் 15 ஆம் தேதி தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்பு ரோஸ் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது. மறை மாவட்ட தலைமைச் செயலர் அமல்ராஜ் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.