Enable Javscript for better performance
பாகிஸ்தானுக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் வ.உ.சி. திடல் அருகே  பாகிஸ்தான் கொடியை எரித்து, இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்திய ராணுவத்தினரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

    இந்து முன்னணி ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியத் தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாவட்டப் பொதுச் செயலர் பெ.சக்திவேலன், மாவட்டச் செயலர் பரமசிவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் முத்துசுந்தரம், சுடலைமுத்து, திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியத் தலைவர் ஓடை முருகேசன், சாத்தான்குளம் ஒன்றியத் தலைவர் பாலகிருஷ்ணன், உடன்குடி ஒன்றியத் தலைவர் முருகேசபாண்டியன், இசக்கி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai