Enable Javscript for better performance
மாநில கால்பந்து: தூத்துக்குடி அணி வெற்றி - Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி கால்பந்துக் கழகத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான செவன்ஸ் கால்பந்து போட்டியில் தூத்துக்குடி அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசைப் பெற்றனர்.

    25-வது ஆண்டு ஆர்.பி.சண்முகையா நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான செவன்ஸ் கால்பந்துப் போட்டி செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இப்போட்டியில் மதுரை, தூத்துக்குடி, கோவில்பட்டி, சாத்தூர், திருச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 அணியினர் விளையாடினர். போட்டி தொடக்க விழாவுக்கு கோவில்பட்டி கால்பந்துக் கழகத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.ராஜீவ்காந்தி ஸ்போர்ட்ஸ் அசோஷியேஷன் செயலர் குருசித்ரசண்முகபாரதி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கியது.

      இதில், இறுதிப் போட்டியில் தூத்துக்குடி செவன் ஸ்டார் அணியினரும், கோவில்பட்டி கால்பந்துக் கழக அணியினரும் மோதினர். இதில், தூத்துக்குடி செவன் ஸ்டார் அணியினர் 3-0 என்ற கோல்கணக்கில் கோவில்பட்டி கால்பந்துக் கழக அணியினரை தோற்கடித்து, முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

    பரிசளிப்பு விழா:

    பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கால்பந்துக் கழக துணைத் தலைவர் சவரிராஜ் தலைமை வகித்தார். பெருமாள்சாமி முன்னிலை வகித்தார்.

      முதல் பரிசு பெற்ற தூத்துக்குடி செவன் ஸ்டார் அணியினருக்கு ஆர்.பி.சண்முகையா நினைவு கோப்பையை செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் எட்வின்நேசஸ் வழங்கினார். 2-ம் பரிசு பெற்ற கோவில்பட்டி கால்பந்துக் கழக அணியினருக்கு பெருமாள்நாடார் நினைவு கேடயத்தை ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளை நிறுவனர் காமராஜ், 3-வது பரிசு தேனம்மாள் நினைவு கேடயத்தை கோவில்பட்டி அன்னை பாய்ஸ் அணியினருக்கு ஜெகவீரபாண்டியபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் வேலாயுதம் வழங்கினார்.

    முன்னதாக கோவில்பட்டி கால்பந்துக் கழக துணைத் தலைவர் கோபிநாத் வரவேற்றார். கால்பந்துக் கழக உறுப்பினர் ரவி நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை கோவில்பட்டி கால்பந்துக் கழக செயலர் தேன்ராஜா செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai