Enable Javscript for better performance
மின் கம்பத்தில் வேன் மோதல்: இளம்பெண் சாவு; கணவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    தட்டார்மடம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மின் கம்பத்தில் ஆம்னி வேன் மோதியதில் இளம்பெண் இறந்தார். அவரது கணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

     தூத்துக்குடி அருகேயுள்ள உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் சுதாகர் (35). ஒப்பந்ததாரர். இவரது மனைவி சூர்யா (30).

        இவரும் ஆம்னி வேனில் சாமிதோப்பு வைகுண்டசாமி கோவிலுக்கு சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தட்டார்மடம் வழியாக ஊர் திரும்பினராம்.

      ஆம்னி வேனை சுதாகர் ஓட்டிவந்தார். வேன் தட்டார்மடம் அடுத்துள்ள நடுவக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் அருகே வரும்போது நிலை தடுமாறி அங்குள்ள மின் கம்பம் ஒன்றில் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த சூர்யா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

      கணவர் சுதாகர் 108 ஆம்புலன்சு மூலம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகிறது.

     இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் மதிவாணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai