Enable Javscript for better performance
முள்ளக்காட்டில் அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி முள்ளக்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இம் முகாமை தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்து, 100-க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.

    வட்டாட்சியர் ஆழ்வாரம்மாள், உணவு வழங்கல் துறை வட்டாட்சியர் ஜுலியன், வருவாய் ஆய்வாளர் வடிவேல், கிராம நிர்வாக அதிகாரிகள் ராமகிருஷ்ணன், மாரிசங்கர், செந்தில்குமார், ஜான்சி, ஆனந்த், மாமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், சாமுவேல்ஞானதுரை, தவசிவேல், மனோகரன், அதிமுக நிர்வாகிகள் ஜெகநாதன், ஜெய்கணேஷ், சரவணக்குமார், பேச்சிமுத்து, வினோத்குமார், பி. மூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.

    சாத்தான்குளம்:சாத்தான்குளம் வட்டம், நடுவக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட தட்டார்மடத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

    நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். தாமரைமொழி ஊராட்சித் தலைவர் ம.ஜெயராமன் முன்னிலை வகித்தார். சாத்தான்குளம் வட்டாட்சியர் பொ.மிகாவேல் ஞானதீபம் வரவேற்றார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கு.மனோகரன் மனுக்களை பெற்றார். 227 மனுக்கள் பெறப்பட்டு, 66 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    வட்ட வழங்கல் அதிகாரி பேச்சிமுத்து, வருவாய் ஆய்வாளர் ஜெ.அகிலா, நில அளவையர் சாம்சன்செல்வநாயகம், கிராம நிர்வாக அலுவலர்கள் சுடலைவடிவேல், சுடலைமுத்து, ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மண்டல துணை வட்டாட்சியர் து .செந்தூர்ராஜன் நன்றி கூறினார்.

    கோவில்பட்டி: கோவில்பட்டி வட்டத்தில், 3 கிராமங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட சிதம்பரம்பட்டியில் நடைபெற்ற முகாமிற்கு ஊராட்சித் தலைவர் மாடசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார்.

    கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு பேசினார். கோட்ட கலால் அலுவலர் நடராஜன் தலைமையில், துணை வட்டாட்சியர் ராஜ்குமார், வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் அமர்ராஜ் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர். 236 மனுக்கள் பெறப்பட்டன. 119 மனுக்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

    முகாமில், விஜயபாண்டியன், நகர மாணவரணிச் செயலர் எல்.எஸ்.பாபு, சட்டப்பேரவைத் தொகுதி இணைச் செயலர் பி.வி.சீனிவாசன், நகர்மன்ற உறுப்பினர் ஜெமினி என்ற அருணாசலசாமி, அதிமுக நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    கடம்பூரில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஜெகநாதன், மண்டல துணை வட்டாட்சியர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முக்கூட்டுமலையில் கோவில்பட்டி வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் முகாம் நடைபெற்றது. இதில், வருவாய் ஆய்வாளர் நாகராஜ் உள்பட வருவாய்த் துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai