Enable Javscript for better performance
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: மாவட்ட கவுன்சிலர் பெயர் நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியலில் குளறுபடி: மாவட்ட கவுன்சிலர் பெயர் நீக்கம்

    By dn  |   Published on : 08th August 2013 12:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியில் மாவட்ட கவுன்சிலரின் பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    சாத்தான்குளம் அருகேயுள்ள படுக்கப்பத்தைச் சேர்ந்தவர் முன்னாள் எம்எல்ஏ எல்.நீலமேகவர்ணம் மகன் கதிரவஆதித்தன். இவர், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியின் 4-வது வார்டு அதிமுக கவுன்சிலர். இந்நிலையில், படுக்கப்பத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணி புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, கதிரவஆதித்தனின் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாம். கடந்த ஜனவரி 10 ஆம் தேதி இந்தப் பெயர் நீக்கப்பட்டது விசாரணையின் முடிவில் தெரியவந்ததாம். இதுதொடர்பாக சாத்தான்குளம் வட்டாட்சியர் பொ. மிகாவேல் ஞானதீபமிடம், கதிரவ ஆதித்தன் முறையிட்டார். அப்போது அவர், பட்டியலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார். அதன்படி தேர்தல் பிரிவு துணை  வட்டாட்சியர் த. தில்லைபாண்டியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai