வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சலுகை
By dn | Published on : 08th August 2013 12:06 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் சலுகை முறையில் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் புதிய மனுதாரர்கள் கல்வித்தகுதி பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதி பதிவு போன்ற பணிகளை ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.
ஏற்கெனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பிப்ரவரி 2012 முதல் ஜூலை 2013 முடியவுள்ள புதுப்பித்தல் காலக்கெடுவுக்குள் புதுப்பிக்கத் தவறிய மனுதாரர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம்.
இந்தப் புதுப்பித்தலுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வரவோ அல்லது மனுச் செய்யவோ தேவையில்லை. வீட்டில் உள்ள இணையதள வசதி உடைய கணினியிலோ அல்லது ஏதேனும் இணையதள வசதி கொண்ட கணினி மையங்களிலோ சிறப்புச் சலுகை அடிப்படையில் புதுப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.