Enable Javscript for better performance
12 பாசன குளங்களுக்கு தண்ணீர் கேட்டு பாஜக உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    12 பாசன குளங்களுக்கு தண்ணீர் வழங்கக் கோரி, சோனகன்விளையில் பாஜகவினர் உண்ணாவிரதமிருந்தனர்.

    பாபநாசம் அணையில் 129 அடி தண்ணீர் இருந்தும், தூத்துக்குடி மாவட்ட தென்பகுதியைச் சேர்ந்த கடம்பா குளத்துக்கு கீழுள்ள 12 குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

    திருச்செந்தூர் ஒன்றிய பாஜக பொருளாளர் கே.எஸ்.தினேஷ் தலைமை தாங்கினார். ஒன்றியத் தலைவர் எம்.சிவசெந்தில், துணைத் தலைவர் ஆர்.வனராஜ், பொதுச் செயலர்கள் இ.தங்கபாண்டியன், பி.முத்துக்குமார், ஆறுமுகனேரி நகரத் தலைவர் எஸ்.மகேந்திரன்,திருச்செந்தூர் நகரத் தலைவர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட பொதுச் செயலர் வி.எஸ்.ஆர்.பிரபு, ஒன்றிய இளைஞரணி பொதுச் செயலர் சி.கண்ணபிரான், மாவட்ட விவசாயப் பிரிவு பொருளாளர் பி.செந்தூர் பாண்டியன் மற்றும் மேலப்புதுக்குடி கிளைத் தலைவர் எம்.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாநில விவசாய அணித் தலைவர் மலையன்சம்பத், மாவட்ட பாஜக தலைவர் எம்.ஆர்.கனகராஜ், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.டி.செந்தில்வேல் ஆகியோர் பேசினர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.என்.ராஜகண்ணன், உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதன்பின்பும் தண்ணீர் திறக்காவிட்டால் இம் மாதம் 14-ம் தேதி சாலைமறியல் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai