Enable Javscript for better performance
இளைஞர்களை கவரும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் செயல்படும்- Dinamani

சுடச்சுட

    

    இளைஞர்களை கவரும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் செயல்படும்

    By கோவில்பட்டி  |   Published on : 09th August 2013 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் கவரும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்படும் என அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் தெரிவித்தார்.

    கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் பார்வையிட்டார்.

    அப்போது அங்குள்ள பட்டுச் சேலைகளை ஆய்வு செய்தார். மேலும், விற்பனை நிலையத்தில் உள்ள இருப்புகள் விவரத்தையும் கேட்டறிந்தார். 

    அப்போது, இந்த விற்பனை நிலையத்தை உடனடியாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிக்கு இடமாற்றம் செய்யும்படி அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.

    பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் 203 விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 20 விற்பனை நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது. 18 ஆண்டுகளாக கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது.

    தமிழக முதல்வர் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனையைப் பெருக்குவதற்காக கனவு நனவு திட்டம், அனைத்துப் பருத்தி மற்றும் பட்டு ரகங்கள் 2 வாங்கினால் ஒன்று இலவசம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான கடன் சலுகைத் திட்டம், சேமிப்புத் திட்டம், தங்கமழை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் 2012-13 ஆம் ஆண்டில் நிகர லாபம் ரூ. 2 கோடியே 30 லட்சம் கிடைத்தது.

    திமுக ஆட்சியில் ரூ.7 கோடி நஷ்டத்தினால் பிராஸஸிங் யூனிட் மூடப்பட்டது. 300 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இந்த நிறுவனத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்து, தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பை கொடுத்ததோடு மட்டுமன்றி, 2011- 12-ம் ஆண்டில் ரூ.40 லட்சம் லாபம் கிடைத்தது.

    2012-13 ஆம் ஆண்டில் சுமார் ரூ.4 கோடி லாபம் ஈட்டியது. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை கவரும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் டி-சர்ட், சுடிதார் மற்றும் காட்டன் உள்ளிட்ட பல்வேறு டிசைன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றார் அவர். ஆய்வின்போது கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு, வட்டார மேலாளர் சுப்பிரமணியன், கோவில்பட்டி விற்பனை மேலாளர் ரத்தினராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai