Enable Javscript for better performance
ஓட்டப்பிடாரத்தில் வேளாண் கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    ஓட்டப்பிடாரத்தில் பாரம்பரிய வேளாண் பொருள்கள் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு  நடைபெற்றது.

    ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடந்த கருத்தரங்கிற்கு வேளாண் உதவி இயக்குநர் இரா.டேவிட்டென்னிசன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயிகளிடம், பாரம்பரிய வேளாண் பொருள்களான இளநீர், சீகைக்காய், பருத்தி மற்றும்  பழமை பொருள்கள் பயன்பாடு மற்றும் முக்கியத்துவம் குறித்த தொழில் நுட்பங்களை வேளாண் உதவி இயக்குநர் பாஸ்கரன், வேளாண் துணை அலுவலர் மாசாணன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுடலைமணி, வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் சுமதி ஆகியோர் விளக்கிப் பேசினர்.

    பொருள்சிறப்பறிஞர் வே.செல்வக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள் ஜெயசீலன், சிக்கந்தர்பாட்சா, சுப்பிரமணி ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai