Enable Javscript for better performance
காமநாயக்கன்பட்டி பரலோக மாதா திருவிழா சிறப்பு மலர் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    காமநாயக்கன்பட்டி பரலோக மாதா திருவிழா சிறப்பு மலர் வெளியீடு

    By கோவில்பட்டி,  |   Published on : 09th August 2013 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதாவின் 330-வது ஆண்டு விண்ணேற்பு பெருவிழாவையொட்டி, சிறப்பு மலர் வெளியீட்டு விழா ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

    ஆலய பங்குத்தந்தை அந்தோனிசாமி முன்னிலை வகித்தார். கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ., விழா சிறப்பு மலரை வெளியிட, அதன் முதல் பிரதியை தொழிலதிபர் ஜெர்மானுஸ் பெற்றுக் கொண்டார்.

    காமநாயக்கன்பட்டி அலாய்சியஸ் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஆரோக்கியராஜ், விண்மீன் அகாதெமியின் எடிசன், ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் ரவிச்சந்திரன், அமிர்தராஜ்பாண்டியன், செண்பகராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜான்கணேஷ் வரவேற்றார். காவல் துறை உதவி ஆய்வாளர் தாமஸ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai