Enable Javscript for better performance
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே மையம் இன்று திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே மையம் இன்று திறப்பு

    By கோவில்பட்டி,  |   Published on : 09th August 2013 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம், சி.டி. ஸ்கேன் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மற்றும் சி.டி. ஸ்கேன் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே மையம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தலைமை வகிக்கிறார். சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கூடுதல் இயக்குநர் அ.சந்திரநாதன் முன்னிலை வகிக்கிறார்.  பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் வீரமணி, சி.டி. ஸ்கேன் மையத்தை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், டிஜிட்டல் எக்ஸ்ரே மையத்தை எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு ஆகியோர் திறந்து வைத்துப் பேசுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai