Enable Javscript for better performance
கோவில் கொடை விழாவில் மோதல்: 8 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வீடு மற்றும் 2 ஆட்டோக்கள் சேதமடைந்தன. இதில் தொடர்புடையதாக 8 பேரை புதன்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

    திருச்செந்தூர் வீரமாகாளியம்மன் கோவில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கொடை விழாவில் வரி கொடுப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வள்ளிராஜ் (30) என்பவரது 2 ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து வள்ளிராஜ் கொடுத்த புகாரின்பேரில் திருக்கோவில் காவல் ஆய்வாளர் செ.பிரதாபன், உதவி ஆய்வாளர் மீனா உள்ளிட்டோர் வீரமாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் பழனி (40), கணேசன் மணிகண்டன் (21), தெற்கு யாதவர் தெருவைச் சேர்ந்த கந்தன் மகன் மாரியப்பன் (27), மைலப்பபுரம் தெருவைச் சேர்ந்த சுடலை மகன் கார்த்தீஸ் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் முருகன் என்பவரை தேடி வருகின்றனர்.

    இதேபோல் அதிமுக வார்டு செயலரான முருகன் என்பவரது வீட்டை ஒரு கும்பல் சேதப்படுத்தி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது. இது குறித்து அவரது மனைவி எல்லையம்மாள் கொடுத்த புகாரின்பேரில் வள்ளிராஜ், அவரது தம்பி கண்ணன், முத்துகிருஷ்ணன் மகன் காளிராஜன் (42) மற்றும் வேலு மகன் ரமேஷ் (23) ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai