Enable Javscript for better performance
திருச்செந்தூர், கயத்தாறில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர், கயத்தாறில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

    By கோவில்பட்டி,  |   Published on : 09th August 2013 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேற்கு வங்க அரசைக் கண்டித்து திருச்செந்தூர்,கயத்தாறில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கயத்தாறு பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் குருசாமி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் மோகன்தாஸ், ஒன்றியச் செயலர் சுப்பையா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மாரியப்பன், சீனிப்பாண்டி, சண்முகையா, சுந்தரி, கிளைச் செயலர்கள் முருகன், ஹரிகிருஷ்ணன், வெள்ளத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சாத்தான்குளம்:சாத்தான்குளம் ஒன்றிய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கொ.பாலசுந்தரகணபதி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்துக்காந்தாரி, ஒன்றியச் செயலர் அ.பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தே.கிருஷ்ணன், இரா.ரவிச்சந்திரன், வ.முருகேசன், பொ.ரமேஷ் ஆகியோர் பேசினர்.

    திருச்செந்தூர்:திருச்செந்தூர் காமராஜர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் செ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பெ.தமிழ்ச்செல்வன், த.திருத்துவராஜ், ஆ.துரைராஜ், ச.கண்ணன், பொன்கல்யாணசுந்தரம், ஒன்றியச் செயலர் சு.பன்னீர்செல்வம், சிவதாணுதாஸ், ஓஎம்எஸ் ஆண்டி, ராமலட்சுமி, மணியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai