Enable Javscript for better performance
தூத்துக்குடியில் டெசோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் டெசோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    By தூத்துக்குடி,  |   Published on : 09th August 2013 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் டெசோ அமைப்பு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13-வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டெசோ அமைப்பு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி அண்ணாநகர் 7-வது தெரு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட செயலர் என். பெரியசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இரா.கனகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் சொ.சு.தமிழினியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. ஏடிகே ஜெயசீலன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.கே. பூபதி, இலக்கிய அணிச் செயலர் ஆ. திருச்சிற்றம்பலம், மாநகராட்சி கவுன்சிலர்கள் கோட்டுராஜா, கீதாமுருகேசன், பாலசுப்பிரமணியன், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai