Enable Javscript for better performance
நகை திருட்டு: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் பெண்ணிடம் நகையைத் திருடியதாக வியாழக்கிழமை 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    சாத்தூர் எலுமிச்சங்காய்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி மகேஸ்வரி (36). இவர், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூரில் சன்னிதித் தெருவில் உள்ள ரெட்டியார் மடத்தில் புதன்கிழமை தங்கினார்.

    அப்போது மகேஸ்வரி தனது கழுத்திலிருந்த 3.25 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி வைத்து விட்டு, குளிப்பதற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது சங்கிலியை காணவில்லை. புகாரின்பேரில் திருக்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் செ.பிரதாபன், உதவி ஆய்வாளர் மீனா உள்ளிட்டோர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் போலீஸார் நாழிக்கிணறு பேருந்து நிலையம் அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு நின்றிருந்த 3 பெண்களைப் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்கள் புதுச்சேரி நெல்லிகுப்பம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மனைவி மங்கா (40), கணேசன் மனைவி கவிதா (30), தங்கராஜ் மனைவி காந்தி (65) என்பதும், அவர்கள் மகேஸ்வரியின் சங்கிலியை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து, தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai