Enable Javscript for better performance
பெற்றோர் மீது தாக்குதல்: மகன் கைது - Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி அருகே சொத்து தகராறில் பெற்றோரை தாக்கிய மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    முத்துசாமிபுரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (70). இவரது மனைவி பொன்னுத்தாய் (65). இவர்களுக்கு 2  மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது மகன் தாமோதரன் சொத்து கேட்டு தகராறு செய்தாராம்.  அப்போது தாய், தந்தையை கம்பால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தர்மராஜ் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து தாமோதரனை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai