Enable Javscript for better performance
விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் சாவு - Dinamani

சுடச்சுட

    

    :ஓட்டப்பிடாரம் அருகே பைக்கில் சென்ற லாரி ஓட்டுநர் கீழே விழுந்து இறந்தார்.

    எப்போதும்வென்றான் கீழத்தெருவைச் சேர்ந்த காசி மகன் பாலமுருகன் (37).  லாரி ஓட்டுநர். இவர், புதன்கிழமை இரவு எப்போதும்வென்றானில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது ஜெயவீரபாண்டியாபுரம் கிராமம் அருகே அவர் பைக்கிலிருந்து கீழே தவறி விழுந்து விட்டாராம்.  இதையடுத்து அவர் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.

    புகாரின்பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் வனிதாராணி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai