Enable Javscript for better performance
ஏழை முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் ஏழை முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகளை  சி.த.செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    தூத்துக்குடி முஸ்லிம் சமுதாய சங்கம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மீ.கா. தெருவில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு சங்கத் தலைவர் ஏ.கே.மைதீன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சி.த. செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஏழை முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது, தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் நலமுடன் வாழ முதல்வர் ஜெயலலிதா உழைத்து வருகிறார். முஸ்லிம் மக்கள் மெக்கா பயணம் மேற்கொள்ள பல்வேறு உதவிகளை அவர் செய்துள்ளார் என்றார் அவர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவுச் செயலர் எஸ். டேனியல்ராஜ், மாநகரச் செயலர் ஏசாதுரை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலர் செல்வராஜ், நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், நகர அவைத்தலைவர் பெருமாள், மாமன்ற உறுப்பினர் முபாரக்ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai