Enable Javscript for better performance
கார் மோதி முன்னாள் ஊராட்சித் தலைவர் சாவு - Dinamani

சுடச்சுட

    

    எட்டயபுரம் அருகே வெள்ளிக்கிழமை பைக்-கார் மோதியதில், முன்னாள் ஊராட்சித் தலைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    டி.சண்முகாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ராமசாமி (67). முன்னாள் ஊராட்சித் தலைவரான இவரும், அதே ஊரைச் சேர்ந்த விவசாயி நா.வெள்ளைச்சாமியும் (65) பைக்கில் கீழஈரால் நோக்கிச்  சென்று கொண்டிருந்தார்களாம்.

    மேலஈரால் விலக்கு அருகே சென்றபோது, பெங்களூரிலிருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், ராமசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பலத்த காயமடைந்த வெள்ளைச்சாமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து எட்டயபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து, கார் ஓட்டுநரான பெங்களூரைச் சேர்ந்த மோகன் மகன் சீனிவாசனை (55) கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai