Enable Javscript for better performance
தூத்துக்குடி கல்லூரியில் கணித ஆராய்ச்சி மையம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி கல்லூரியில் கணித ஆராய்ச்சி மையம் தொடக்கம்

    By தூத்துக்குடி  |   Published on : 10th August 2013 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கணித ஆராய்ச்சி மைய தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    இக் கல்லூரியில் கணிதத் துறையில் ஆராய்ச்சி மையம் 2013-14-ம் கல்வியாண்டு முதல் செயல்பட மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.  இதற்கான தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் கல்லூரிச் செயலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் சி. சுயம்புலிங்கம் பேசினார். கல்லூரி முதல்வர் மோகன்ராஜ், முன்னாள் முதல்வர் செல்வராஜ், பேராசிரியர் இன்பநாயகம், கணிதத் துறைத் தலைவர் ஆ.முனியசாமி, ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai