Enable Javscript for better performance
தூத்துக்குடி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகை

    By தூத்துக்குடி,  |   Published on : 10th August 2013 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :ரம்ஜான் பண்டிகையையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

    தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகை இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். இதேபோல, தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையிலும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    தொழுகையின் முடிவில் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், தொழுகை முடிந்ததும் அனைவரும் இனிப்புகளை வழங்கினர். தூத்துக்குடியில் திரேஸ்புரம், ரஹமத்துல்லாபுரம், ஜெயலானிதெரு, புதுத்தெரு, முத்தம்மாள்காலனி, ஜாகீர் உசேன்நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    கோவில்பட்டி:  கோவில்பட்டி செக்கடித் தெரு அருகேயுள்ள டவுண் ஜாமியா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை காஜி மெüலமிஅபுல்காசீம்ஆலின் நடத்தினார்.

    பள்ளிவாசல் தலைவர் தணிக்கையாளர் உதுமான்அலி, செயலர் அமனுல்லாகான், பொருளாளர் ஹம்சத்பாட்ஷா, துணைத் தலைவர் ஹனிபா, துணைச் செயலர் பிஸ்மின்கமர்தீன், நிர்வாகக் குழு உறுப்பினர் ஷேக்அப்துல்காதர் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

    இதுபோல, கோவில்பட்டி புதுக்கிராமம் முகமதுசாலியாபுரத்தில் உள்ள பள்ளிவாசலிலும், கயத்தாறு பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

    நலத்திட்ட உதவிகள்: கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, முதியோர்கள், ஏழை, எளியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வகைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் விஜயன் தலைமை வகித்தார். நூர்செய்யதுஅலி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அறக்கட்டளை நிறுவனத் தலைவர் தேன்ராஜா, நாடார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ராஜரத்தினம், ரெங்கராஜன், சேர்மராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    காயல்பட்டினம்:  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் பெருநாள் தொழுகை வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. ஏ.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் தொழுகையை நடத்தினார். ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளியின் கத்தீப் அப்துல் மஜீத் உமரீ உரையாற்றினார். மரைக்கா ஆலிம், சாலப்பா, கோமான் காஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நலநிதிக்காக ரூ. 75 ஆயிரத்து 380-ம், தங்க மோதிரம் ஒன்றும் நன்கொடையாகப் பெறப்பட்டது.

    காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி, மரைக்கார் பள்ளி, அப்பா பள்ளி, கடைப்பள்ளி, தாயிம்பள்ளி, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி, ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளி, செய்கு ஹுûஸன் பள்ளி, புதுப்பள்ளி, மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி, மேலப்பள்ளி, அரூஸிய்யா பள்ளி, முஹ்யித்தீன் பள்ளி, மகுதூம் ஜும்ஆ பள்ளி, ஹாஜியப்பா தைக்கா பள்ளி, ஆறாம்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, அஹ்மத் நெய்னார் பள்ளி, ஜாவியா, சிறிய குத்பா பள்ளி, பெரிய குத்பா பள்ளி, இரட்டை குளத்துப் பள்ளி, கோமான் மொட்டையார் பள்ளி, ùஸய்யிதினா பிலால் பள்ளி, கற்புடையார் பள்ளி, கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி ஆகிய பள்ளிகளில், வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

    அந்தந்த பள்ளிவாசல்களின் இமாம்கள் தொழுகையை வழிநடத்தினர். காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சுமார் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் தைக்காக்களில் பெண்களுக்கு தனியாக நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai