Enable Javscript for better performance
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் அமைச்சர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் அமைச்சர் ஆய்வு

    By கோவில்பட்டி  |   Published on : 10th August 2013 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தை, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பச்சைமால் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

    அப்போது, மருந்தகத்தில் உள்ள குறைகளைக் கேட்டறிந்தார். மருந்தகம் மற்றும் மருந்தக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளதாக அங்குள்ளவர்கள் கூறினர். இதையடுத்து நகராட்சி ஆணையரை அழைத்து குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், இம் மருந்தகத்தில் சுமார் 9 ஆயிரத்து 73 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்றால், குறைந்தது 30 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்றார்.

    ஆய்வின்போது எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு, மதுரை மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் சந்திரன், சென்னை இணை இயக்குநர் சம்பத், கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தக தலைமை மருத்துவர் நளினதாரா, மருத்துவர்கள் அனிதா, நிர்மலா, மரியசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர். கோவில்பட்டி நகராட்சி ஆணையர் வரதராஜ், நகர்மன்ற துணைத் தலைவர் ராமர், அதிமுக நகரச் செயலர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai