Enable Javscript for better performance
நாசரேத்தில் ஆசிரியையிடம்நகைப் பறிப்பு: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நாசரேத்தில் ஆசிரியையிடம்நகைப் பறிப்பு: இருவர் கைது

    By சாத்தான்குளம்  |   Published on : 10th August 2013 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாசரேத்தில் ஆசிரியையிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

    நாசரேத்தைச் சேர்ந்த பொன்தாஸ் மனைவி ஜெனிட்டா(36). இவர், அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர், வியாழக்கிழமை பள்ளி முடிந்ததும் நடந்து சென்று கொண்டிருந்தாராம். நாசரேத் கதீட்ரல் சபா மண்டபம் பகுதியில் சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் ஜெனிட்டா அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்றனராம். இதைக் கண்டதும் அப்பகுதி பொதுமக்கள், மர்மநபர்களை பின்தொடர்ந்து சென்று ஆழ்வார்திருநகரியில் வைத்து மடக்கி பிடித்து நாசரேத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் ஏரலைச் சேர்ந்த ஆ. மாரியப்பன் என்ற மாரிமுத்து (27), அதே பகுதியைச் சேர்ந்த ம. பால்ராஜ் (25) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீஸார், தங்கச்சங்கிலியையும் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai