Enable Javscript for better performance
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு:சுமைதூக்கும் தொழிலாளி கைது- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணுக்கு அரிவாள் வெட்டு:சுமைதூக்கும் தொழிலாளி கைது

    By ஓட்டப்பிடாரம்,  |   Published on : 10th August 2013 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :ஓட்டப்பிடாரம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டியதாக, சுமைதூக்கும் தொழிலாளியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    ராஜாவின்கோவில் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் மனைவி ஸ்ரீதேவி (33). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் சுமைதூக்கும் தொழிலாளியான காலமுத்துவேல் (43) மனைவி அன்னலட்சுமிக்கும் குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாம். அப்போது காலமுத்துவேல், ஸ்ரீதேவியை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புதியம்புத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து காலமுத்துவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai