Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளி குழந்தைகள் மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத்திறனாளி குழந்தைகள் மருத்துவ முகாம்

    By கோவில்பட்டி  |   Published on : 10th August 2013 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைவருக்கும் கல்வி இயக்கம் கோவில்பட்டி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையத்தில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமிற்கு வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார்.

    உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கணேசன், செண்பகக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ராஜமாணிக்கம் முகாமை  தொடக்கி வைத்தார்.

    இதில், கோவில்பட்டி வட்டார வள மையத்திற்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் 135 பள்ளிகளில் பயிலும் 6 வயது முதல் 16 வயதுக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் வள மைய குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் மருத்துவர்கள் உமா, கமலவாசன், இளவரசி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியப் பயிற்றுநர்கள் பேச்சியம்மாள், பெர்னால்டுஹில்லாரி, பரமசிவன், அனிதா கனிஷ்டாமேரி, மாரிமுத்துக்கண்ணன், நாகஜோதி, மணிகண்டன், முத்துலட்சுமி, சிவசங்கரி ஆகியோர் செய்திருந்தனர்.

    இதில், பள்ளி துணை ஆய்வாளர் அழகிரிசாமி, ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சின்னராசு வரவேற்றார். வெயிலுமுத்து நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai