Enable Javscript for better performance
ரேஷன் கடைகளில் முறைகேடு: 43 விற்பனையாளர்களிடம் அபராதம் வசூல்- Dinamani

சுடச்சுட

    

    ரேஷன் கடைகளில் முறைகேடு: 43 விற்பனையாளர்களிடம் அபராதம் வசூல்

    By தூத்துக்குடி,  |   Published on : 10th August 2013 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் முறைகேடு செய்ததாக 43 விற்பனையாளர்களிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

    இதுகுறித்து தூத்துக்குடி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் க.பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம் மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி வட்டாரத்தில் உள்ள 43 ரேஷன் கடைகளில்  பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    போலி ரசீது மூலம் 631 கிலோ அரிசி, 256 கிலோ சர்க்கரை, 27 கிலோ கோதுமை, 48 லிட்டர் மண்ணெண்ணெய் உள்ளிட்டவை முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.

    முறைகேடுகள் செய்த 43 விற்பனையாளர்களிடம் இருந்து ரூ. 27,499 ரொக்கம் அபராதத் தொகையாக வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai