Enable Javscript for better performance
வியாபாரிகள் சங்க விழா - Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க நான்காம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

    சங்கத் தலைவர் ரெ.காமராசு தலைமை வகித்தார். பொருளாளர் எஸ்.யாபேஷ், துணைத் தலைவர் கே.செல்வக்குமார், எம்.ஐசக், எம்.முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தீர்மானங்கள்: உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மூலம் வணிகர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். கோவில் நகரான திருச்செந்தூரில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக இரவு நேர உணவுக் கடைகள் மற்றும் மருந்தகங்களைத் திறக்க காவல்துறை அனுமதிக்க வேண்டும். ரத வீதிகளில் வணிக நிறுவனங்களுக்கு சரக்கு கொண்டு வரும் கனரக வாகனங்களுக்கு காவல்துறை உரிய அனுமதி வழங்க வேண்டும். குண்டும்-குழியுமாக உள்ள திருச்செந்தூர் ரதவீதி சாலைகளைச் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டன.

    தொழிலதிபர்கள் உதயம் ஜே.டி.ஆனந்தராஜ், குறிஞ்சி டி.எஸ்.சுரேஷ், பி.ஆறுமுகம், ஆர்.சி.செல்வின், வழக்குரைஞர்கள் கே.ஜேசுராஜ், ஜெ.எஸ்.டி.சாத்ராக், சங்க சட்ட ஆலோசகர்கள் ச.குருராமன், ஜெ.திலீப்குமார், காந்தி தினசரி சந்தை சங்கத் தலைவர் எம்.திருப்பதி, ஜெ.ஜெயசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து சங்கத்தின் தலைவராக ரெ.காமராசு, செயலராக கே.செல்வக்குமார், பொருளாளராக பா.செல்வின் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக சங்கச் செயலர் எ.வி.சுரேஷ் வரவேற்றார். பா.செல்வின் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai