Enable Javscript for better performance
அதிமுக அரசின் சாதனைகள்:துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக அரசின் சாதனைகள்:துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

    By கோவில்பட்டி,  |   Published on : 11th August 2013 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக அரசின் 2 ஆண்டு சாதனைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகத்தை கோவில்பட்டியில் சமூக நலத் துறை அமைச்சர் வளர்மதி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் வளர்மதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது,

     தமிழக அரசு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு மாநகராட்சிகளிலும் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் அனைவருக்கும் பயன் அளிக்கிறது. இதுபோன்ற திட்டங்கள் எல்லாம் அனைத்து மாநிலங்களிலும் இடம்பெறும் வகையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.

    விழாவில், கோவில்பட்டி நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி, துணைத் தலைவர் ராமர், நகர அதிமுக செயலர் சங்கரபாண்டியன், ஒன்றியச் செயலர் அய்யாத்துரைப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து

    கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai