Enable Javscript for better performance
கல்லூரியில் வேதியியல் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி பெண்கள் கல்லூரியில் தேசிய அளவிலான வேதியியல் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி தலைமை வகித்தார். வஉசி கல்விக் கழகத் தலைவர் சொக்கலிங்கம் வாழ்த்திப் பேசினார். தற்கால வேதியியல் நடப்புகள் என்ற தலைப்பில், நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக ஆலோசகர் சிவசுப்பிரமணியன் பேசினார்.

    கோவா டைனான் பிரசாரக் மேனிடல் கலை அறிவியல், மற்றும் வணிகவியல் கல்லூரியின் இணைப் பேராசிரியர் வடிவேல், மைசூர் மத்திய உணவுத் துறை விஞ்ஞானி  ராமலட்சுமி, காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைத் தலைவர் சேதுராமன் ஆகியோரும் பேசினர். 29 மாணவர்கள் கட்டுரைகளை தாக்கல் செய்தனர். வேதியியல் துறைத் தலைவி சாரதா நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai