Enable Javscript for better performance
குரும்பூர் அருகே 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    குரும்பூர் அருகிலுள்ள அங்கமங்கலம் கிராமத்தில் ஹோட்டல் மற்றும் மாஸ்டர் மீது தாக்குதல் நடத்திய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

     குரும்பூர் அருகில் அங்கமங்கலத்தில் ஹோட்டல் நடத்தி வருபவர் யாக்கப் மகன் ஜெயசீலன்(26). இவரது ஹோட்டலுக்கு வெள்ளிக்கிழமை இரவு  மணத்தியைச் சேர்ந்த மூக்கன் மகன் மாரிமுத்து (31) மற்றும் டிரைவர் சோழியன்குறிச்சி பொன்பலவேசம் மகன் இளங்கோ (24) ஆகிய இருவரும் சாப்பிட வந்துள்ளனர்.

     அப்போது ஏற்பட்ட தகராறில் ஹோட்டல் மாஸ்டரான திருநெல்வேலி மானூரைச் சேர்ந்த அமல்ராஜை (45) அவர்கள் இரும்பு கம்பியால் தாக்கினராம். மேலும் ஹோட்டலில் உள்ள மேஜைகளையும் சேதப்படுத்தினராம். இது தொடர்பாக ஜெயசீலன் குரும்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து மாரிமுத்து, இளங்கோவை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai