Enable Javscript for better performance
சாலையில் மின்கம்பி விழுந்துபோக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சாலையில் மின்கம்பி விழுந்துபோக்குவரத்து பாதிப்பு

    By ஆறுமுகனேரி  |   Published on : 11th August 2013 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரி அருகில் உயர் மின் அழுத்த மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்ததால் சனிக்கிழமை இரவு ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     தூத்துக்குடியிலிருந்து சாகுபுரத்திலுள்ள ஆறுமுகனேரி உபமின்நிலையத்துக்கு வரும் 110 கிலோ வோல்ட் மின் திறன் கொண்ட, உயர் மின் அழுத்த மின்கம்பி ஆறுமுகனேரியையடுத்த சாகுபுரம் பாலத்துக்கு அருகில் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் இரவு 7 மணி அளவில் அறுந்து விழுந்தது.

     இரு மின்கோபுரங்களுக்கிடையில் அறுந்து நீண்ட தூரம் கிடந்த இந்த வயரினால் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இருபுறமும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நின்றன.

     ஆறுமுகனேரி உபமின்நிலைய உதவி செயற்பொறியாளர் செüந்திரராஜன், உதவிப் பொறியாளர் பேச்சிமுத்து, ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்ப இடத்துக்குச் சென்று, போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து  இரவு 8.30 மணிக்கு போக்குவரத்து சீரானது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai