Enable Javscript for better performance
தாதுமணல் பிரச்னை: பெரியதாழையில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தாதுமணல் பிரச்னை: பெரியதாழையில் ஆர்ப்பாட்டம்

    By சாத்தான்குளம்  |   Published on : 11th August 2013 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாதுமணல் பிரச்னை குறித்து ஆய்வு நடத்த வலியுறுத்தி பெரியதாழையில் மீனவர் கூட்டமைப்பினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரியதாழையில் உள்ள கடற்கரைப் பகுதியில் தனியார் நிறுவனம் முறைகேடாக மணல் அள்ளி வருவதால், அங்குள்ள கடலில் கழிவு மணல் தேங்கி, தூண்டில் பாலம் 800 மீட்டர் அளவுக்கு குறைந்து 200 மீட்டர் அளவாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அந்நிறுவனம் மணல் அள்ளுவதைத் தடை  செய்ய வேண்டும். தமிழக அரசு நியமித்துள்ள சிறப்புக் குழு இங்கு முறையான ஆய்வை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியதாழையில் ஊர்நலக்கமிட்டி, மீனவர்கள் கூட்டுறவு சங்கம், எஸ்.வி.எம். நற்பணி இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்குள்ள மத்திய பஸ் நிறுத்தம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊர் நலக்கமிட்டி தலைவர் கான்சியூஸ் தலைமை வகித்தார். மீனவர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் அமலன் முன்னிலை வகித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai